வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு

Tamils Sri Lankan Peoples
By Dilakshan Mar 10, 2024 12:26 AM GMT
Report

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜையின் போது காவல்துறையினரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டமானது, நாளை(11) மாலை 4 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகா சிவராத்திரி பூஜையின் போது காவல்துறையினரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி கவனயீர்ப்பிற்கு ஒருங்கிணைந்த கட்டமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கின்றோம்.

வெடுக்குநாறி மலை இலிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி பூஜையின் போது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


காவல்துறை அராஜகம்

சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு | Vedukkunari Issue Protest On Monday

அதன் உச்ச கட்டமாக தவறேதும் செய்யாத சிவனடியார்கள் எண்வர் விரதமிருந்து பூஜையில் ஈடுபட்ட தருணம் மோசமாக கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பூஜை மற்றும் படையல் பொருட்கள் காலணி அணிந்த கால்களினால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றப்பட்டுள்ளது, பூசகர் சிவத்திரு மதிமுக ராசா மீள கைது செய்யப்படுள்ளார்.

அணிதிரண்டு எதிர்ப்பு

இந்த ஈனச் செயல்கள் மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதுடன் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என்பதை உலகிற்கும் அரச உயர் பீடத்திற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும்.

வெடுக்குநாறிமலையில் அத்துமீறிய காவல்துறையினர்: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு | Vedukkunari Issue Protest On Monday

உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில் இந்த சிவராத்திரி தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற மோசமான சம்பங்களை கண்டித்தும் கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் நாம் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023