தாறுமாறாக உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை
srilanka
vegetable
price
By Sumithiran
மரக்கறிகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பேலியகொட மோனிங் பொதுச் சந்தை தொழிற்சங்கத்தின் தலைவர் உபசேன(upasena) தெரிவித்துள்ளார்.
உரத் தடை காரணமாக விவசாயிகள் காய்கறி சாகுபடியை கைவிட்டதாகவும், சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் விளைச்சல் குறைந்ததால் காய்கறிகளின் விலைகள் அதிகரித்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா, யாழ்ப்பாணம், தங்காலை, அக்குரஸ்ஸ, கண்டி, மட்டக்களப்பு, கடுவெல மற்றும் தெனியாய உட்பட நாட்டின் அனைத்து மரக்கறி விளையும் பிரதேசங்களிலிருந்தும் மரக்கறிகள் மோனிங் சந்தைக்குக் கிடைக்கும்.ஆனால் தற்போது அவை மிகவும் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோ பீன்ஸ் விலை ரூ.550-600 ஆகவும், கரட் கிலோ ரூ.350-400 ஆகவும், வெண்டைக்காய் கிலோ ரூ.350 ஆகவும், தக்காளி கிலோ ரூ.500-600 ஆகவும் விற்பனை செய்யப்படவதாக தெரிவிக்கப்படுகிறது.