வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
மேல் மாகாணத்தில் (Western province) வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை இறுதி நாளான 2025 மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பெறவுள்ளவர்களுக்கு பிறிதொரு நாளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் உள்ளுராட்சி தேர்தலுக்குப் பிறகு பணிகள் தொடங்கும் முதல் நாளில், அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தி வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
அதாவது மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படவுள்ள நிலையிலேயேஇந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலின் போது தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எல். தம்மிக கே. விஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
