வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்
பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர திசாநாயக்க (President Anura Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாகன விலைகள் சற்று அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கங்கம்
முந்தைய அரசாங்கங்களைப் போலல்லாமல், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வாகனப் பேரணிகளில் இருக்க மாட்டார்கள் என்றும், அனைத்து அமைச்சர்களும் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகன இறக்குமதிக்கான வரியில்லா அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ (A. Anil Jayanta Fernando) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |