அதிகரிக்கப்போகும் வாகன விலைகள்! வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 2.5 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் வாகன விலையேற்றத்திற்கு மற்றொரு காரணியாக அமையும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
[LJYW8LP
அரசாங்கத்திற்கான வருமானம்
வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் சுமார் 700 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மூலமே அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மின்சார வாகனங்களின் இறக்குமதியில் காணப்படும் வரி சிக்கல்கள் காரணமாக, அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் குறைவாக உள்ள நிலையில், இது குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சமூகப் பாதுகாப்பு வரி உயர்வு மற்றும் வெளிநாட்டு செலாவணி விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, சந்தையில் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என பிரசாத் மானகே மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |