வேம்படி மாணவிக்கு சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருது
தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த விருது வழங்கும் விழாவில் யாழ் மாணவிக்கு வருடத்திற்கான சிறந்த புத்தாக்குனர் விருது வழங்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் உள்ள நட்டசத்திர விருந்தினர் விடுதியில் இந்த சிகழ்வு நேற்று(16.05.2026) இடம்பெற்றது.
இதில் வடக்கு மாகாணத்திற்கான பாடசாலை ரீதியில் சிறந்த புத்தாக்கமாகவும் இவ்வருடத்திற்கான சிறந்த புத்தாக்குனராகவும் யா/ வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையை சேர்ந்த செல்வி ரூபிகா அருந்தவம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான விருதும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
இதே மாணவி கடந்த ஜுன் 05ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான புதிய கண்டுபிடிப்பு போட்டியிலும் பங்குபற்றி சிறப்பு சான்றிதழ் பெற்ற ஒரு வளர்ந்துவரும் புத்தாக்குனரும் ஆவார்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |