மதுரோவை விடுவிக்காவிட்டால்...! அமெரிக்காவிற்கு வெனிசுலா படையின் அதிரடி எச்சரிக்கை
Donald Trump
United States of America
World
Venezuela
By Shalini Balachandran
வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் மதுரோவை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையை வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட நிலையில் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முதல் பெண்மணி
அத்தோடு, நாங்கள் மதுரோவையும் முதல் பெண்மணியையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது வெனிசுலாவின் சட்டபூர்வமான ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |