விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள செட்டிகுளம் பிரதேச சபை அழைப்பிதழ்
வுவுனியா - செட்டிகுளம் பிரதேச சபையின் அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிவழி ரீதியாக பெயர் அச்சிடப்படாமையால் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
செட்டிகுளம் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் அழைப்பிதழில் பிரதி அமைச்சரின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் ஆறாவது இடத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது தமிழ் தேசிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இருப்பதனால் அக் கட்சியின் பங்காளி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுர்தீனின் பெயர் முதலாவதாக எழுதப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அவமதிக்கும் வகையிலான செயற்பாடு
மேலும் உப தவிசாளர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் என்பதால் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பா. சத்தியலிங்கத்தின் பெயர் இரண்டாவதாகவும் பதியப்பட்டுள்ளதுடன் பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கே.மஸ்தான் ஆகியோர் மூன்றாவது மற்றும் ஏழாவது இடங்களிலும் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பதியப்படும் போது ஒழுங்குமுறையொன்று உள்ள நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் செயற்பட்டுள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

