எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் இருவருக்கு அபராத தொகையும் மேலும் நால்வருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டையும் அளிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரிமாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு(delft) கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 6 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை(kayts) நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றையதினம் வரை விளக்கமறியல்
இம்மாதம் 5 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 6 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 6 பேரில் 4 பேருக்கு ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.
ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை
இந்த 6 பேரில் இருவர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது.அத்துடன் படகோட்டிகள் இருவருக்கும் தலா நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இரு படகுகளுடன் கடற்படையினர் இவர்களை கைது செய்திருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |