சஹ்ரான் பற்றிய கசிந்த காணொளிகளின் பின்புலம்: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணைகள்
ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் பற்றிய சில காணொளிகள் எவ்வாறு வெளி வந்தன என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த அதிபர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்காத சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்: மீண்டும் நடைமுறைக்கு வருகிறது எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டம்
ஆணைக்குழுவின் அறிக்கை
விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்த காவல்துறை அதிகாரியும் குற்றவாளிகளாக குறிப்பிடப்படவில்லை.
அவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் மாத்திரமே அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானம் எடுத்துள்ளார்.
அத்துடன், தாக்குதல்களுக்கு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொறுப்புகூறவேண்டுமென அறிக்கையில் ஆணைக்குழுவின் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
உயர்நீதிமன்றமே அவரை குற்றவாளியென கண்டறிந்து, இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.