முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளி வெளியிட்ட நபர் கைது
முஸ்லிம்கள் தெய்வமாக நம்பும் அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்றை தயாரித்து அதனை முகநூல் ஊடாக பகிர்ந்த நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒருவர் தமது மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளி ஒன்றை தயாரித்து அதனை முகநூல் ஊடாக பகிரங்கப்படுத்தியதாக பல முஸ்லிம் மௌலவிகள் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது சந்தேகநபர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சில்லறை வியாபாரம் செய்யும் 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.