மாவீரர் நினைவேந்தலில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த சீமான்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மரணமடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்துள்ளார்.
இந்தியாவின் காரைக்குடியில், நேற்று (27) நாம் தமிழர் கட்சியால் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடி
மேலும் கருத்து தெரிவித்த அவர், “போர்க்காலத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ தளபதிகள் கூறினர். அதன்படி, வெள்ளைக்கொடியுடன் சென்று 300 பேர் சரணடைந்தனர்.
வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களை கொலை செய்ய கூடாது என்பது சர்வதேச போர் மரபு.
இருப்பினும், அவர்களை எப்படி கொலை செய்தீர்கள் ? ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.

முள்ளிவாய்க்காலில் இருந்து எல்லோரும் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகின்றோம் என அழைத்தவர்கள் சிங்கள இராணுவத்தினர்.
சரணடைந்த 10,000 இற்கும் மேற்பட்டோர் இப்போது எங்கே போனார்கள் ? அவர்கள் கொல்லப்பட்ட போது சர்வதேசத்திலும் இருந்தும் எவரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை ?” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய தலைவரையும் அவர் நினைவு கூறி தனது உரையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |