ஸ்டாலினின் கல்லாப்பெட்டி கூட்டணி! தி.மு.க கட்சியை கடுமையாக சாடிய விஜய்
''கொள்ளையடித்த பணத்தை கொடுத்து கூட்டணிக்கு கட்சிகளை பிடிக்கின்றனர். அது, கல்லாப்பெட்டி(பணப்பெட்டி) கூட்டணி,'' என தமிழக தேர்தல் பரப்புரையில் தி.மு.க கட்சியை த.வெ.க தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ்நாட்டின் வேலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், கூட்டத்தில் விஜய் பேசியதாவது,
பொய்யான வாக்குறுதி
“மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாத காரணத்தினால், இத்தனை வருடமாய் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் எமது கட்சி வந்துள்ளது.

இதுவரை நடந்த தேர்தல், வேறு இப்பொழுது நடக்க போகும் தேர்தல் வேறு. ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை நடக்கும் தேர்தலாக நினைத்து விடாதீர்கள்.
50 வருடத்திற்கு ஒருமுறை நடக்க போகும் தேர்தல் இது.
மேலும், அரசியலுக்கு வந்த பிறகு உங்களிடம் இருக்கும் சொத்து விபரத்தை வெளியிட முடியுமா? அந்த உண்மையாக உழைத்து வந்த பணமா?
அறிவாலயம் பக்கத்தில் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார்.
கொள்ளையடித்து வைத்திருக்கிற பணத்தில் ஒரு பங்கு கொடுத்து கூட்டணியில் சேர்க்கின்றனர்.
அதற்கு கல்லாப்பெட்டி கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறேன். கொள்ளையடித்த பணத்தில் எங்கள் மக்களை ஏமாற்றியோ ஜெயிக்க முடியாது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |