விஜய் மேடையில் தமிழ்தாய் நெரிப்பு! அரசியல் இனி எப்படி போகும்
தமிழகதலைநகர் சென்னையில் இன்றுகாலை பெரும் ஆரவாரங்களுக்கு மத்தியில், ஜோசப்விஜய் என்னும் நான்… என்ற வாய்மொழி பிரமாணங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் குதூகலிப்பு ஆரவாரங்கள் மற்றும் அதகளகளங்களுடன் முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா முடிந்து விட்டது. அவரும் தமிழக தலைமைச் செயலகத்துக்கு சென்று முதல்வர் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்.
இப்போது தமிழகத்துக்கு உள்ள 10 லட்சம் கோடி ரூபா கடனை மையப்படுத்தி விஜய் எதிர் ஸ்ராலின் அரசியல் குஸ்தியும், இலவசங்களின் நடைமுறையில் விஜய்க்குரிய தயக்கமும் ஆரம்பித்துவிட்டது.
இன்றைய பதவியேற்பு நாளில் முதலில் ஒலிக்கவேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டு முதலில் வந்தேமாதரம் ஒலித்தமை தமிழ்தேசிய வாதிகளை கிலேசமடையவைக்கும் நிலையில் சாதகங்கள் மற்றும் சவால்களுக்குரிய முதல்வர் விஜய்யின் ஆட்சிப்பயணத்தில் முதல்நாள் நகர்வுகளின் குறுக்குவெட்டாக வருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |