டெல்லி செல்ல தயாராகும் முதலமைச்சர் விஜய்!
தமிழக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லி செல்லும் முதலமைச்சர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க உள்ளார்.
7 அடி உயர வள்ளுவர் சிலை
தமிழக அரசின் ரூ.65 லட்சம் நிதி உதவியுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 7 அடி உயர வள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வரின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதல்வர் தங்கும் அறை, ஆலோசனை அரங்கம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை துரிதப்படுத்த தமிழகத்தில் இருந்து அரசு அதிகாரிகள் விரைவில் டெல்லி செல்கின்றனர்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லிக்கு வரும் விஜய்க்கு அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |