கோட்டாபயவினால் அன்று ஏன் தடுக்க முடியாமல் போனது - சபையில் சரமாரியான கேள்விகளைத் தொடுத்த ஜே.வி.பி

srilanka vijitha herath
By Vasanth Apr 10, 2021 09:01 AM GMT
Report

யுத்தகாலத்தில் அரசாங்கத்துக்கு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டவர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அரசாங்கம் சம்பளம் வழங்கி பயன்படுத்தியவர்களுக்கு எந்த காலத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கியது நிறுத்தப்பட்டது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது அவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மைத்திரி, ரணில் அரசாங்கம் புலனாய்வு துறையின் தகவல்களின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.

தகவல் கிடைத்தும் அது தொடர்பில் அசமந்தப்போக்கில் இருந்த கடந்த அரசாங்கம் இந்த தாக்குதலின் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது. அத்துடன் அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டவர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்த காலத்தில் புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் நபர்களை அரசாங்கம் சம்பளம் வழங்கி வைத்திருந்தது, அனைவரும் தெரிந்த விடயம். அவ்வாறு புலனாய்வு தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் நபர்களை பயன்படுத்தியதும், அவர்களுக்கு சம்பளம் வழங்கியதும் தவறு என நாங்கள் தெரிவிக்கவில்லை.

ஆனால் இவ்வாறு சம்பளம் வழங்கி அரசாங்கம் பயன்படுத்தியவர்களுக்கு எந்த காலத்தில் சம்பளம் வழங்குவது நிறுத்தப்பட்டது? தற்போது அவர்களின் நிலை என்ன? இதுதொடர்பாக எந்த பதிலையும் அரசாங்கம் வழங்கவில்லை.

இவ்வாறு சம்பளம் வழங்கி பயன்படுத்தப்பட்டவர்கள் தற்போதும் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

மேலும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து, தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற அழுத்தத்தை கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து இந்த அரசாங்கத்துக்கு மேற்கொண்டுவந்தது.

அந்த அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கே, தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவி என அமைச்சர் சரத் வீரசேகர வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அமைச்சரின் இந்த கூற்று சிறுபிள்ளைத்தனமானதாகும். அத்துடன் நெளபர் மெளலவி 2014 இல் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியுடன் இணைந்துகொண்டு, அவர் இலங்கையில் அந்த அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டு வந்ததாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

2014 இல் எமது நாட்டில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மஹிந்த ராஜபக்ஷ. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ. அன்று இந்த அரசாங்கத்துக்கு இதனை தடுக்க முடியாமல் போயிருக்கின்றது.

அத்துடன் குண்டுத்தாக்குதலில் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொண்டார்.

அதனால் தான் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து, சட்டத்தை நிலைநாட்டவேண்டும் என அவர் தொடர்ந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்