மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : சுட்டுக் கொல்லப்பட்ட 2 மாணவர்கள்

Government Of India India Manipur
By Sathangani Sep 27, 2023 05:07 AM GMT
Report

இந்தியாவின் மணிப்பூரில் கலவரத்தின் போது காணாமல் போன மெய்தி இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே மோதல் ஆரம்பித்து மிகப்பெரிய கலவரமாக மாறியுள்ள நிலையில் இதுவரை 200 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே மெய்தி இன மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

பிரபல பாடசாலையில் கசிப்பு விற்ற மாணவன் கைது

பிரபல பாடசாலையில் கசிப்பு விற்ற மாணவன் கைது


காணொளியால் பதற்றம்

சுட்டுக் கொல்லப்பட்ட குறித்த மாணவர்களது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அவர்களுடைய நிலைமை என்னவானது என்று தெரியாமலிருந்த நிலையில்  திங்கட்கிழமை இரவு (25)  அவர்கள் பற்றிய பரபரப்பு செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : சுட்டுக் கொல்லப்பட்ட 2 மாணவர்கள் | Violence Again In Manipur 2 Students Shot Dead

குறித்த மாணவர்களில் ஒருவர் 17 வயதான ஹிஜம் மற்றும் 20 வயதான பிஜம்  இருவரும் முகாம் ஒன்றில் புல்வெளி தரையில் உட்கார வைத்து இருப்பது போன்ற காட்சியும், அவர்களுக்கு பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்பது போன்ற காட்சியும் காணொளி மூலம் பரபரப்பாக பரவியது.

அதே காணொளியில்  அடுத்த சில நிமிடங்களில் அந்த 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

இன்று ஜேர்மன் நோக்கிப் புறப்பட்டார் ரணில்

இன்று ஜேர்மன் நோக்கிப் புறப்பட்டார் ரணில்


இந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகியிருக்கிறது.

கடுமையான நடவடிக்கை

மாணவர்கள்  கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும்  காட்சி பற்றி அரசு விசாரணை தொடங்கி உள்ளது. அந்த 2 பேரையும் குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள் சுட்டு கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் : சுட்டுக் கொல்லப்பட்ட 2 மாணவர்கள் | Violence Again In Manipur 2 Students Shot Dead

இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஜூலை மாதம் அந்த 2 மாணவர், மாணவி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தி வந்தோம். ஏற்கனவே அவர்கள் தொடர்பான வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று


மற்றொரு அரசு உயர் அதிகாரி கூறுகையில், " மாணவர், மாணவியைக் கொன்றவர்கள் மீது உறுதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதேவேளை பொது மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024