பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் மக்கள் - வடமராட்சி மக்கள் விசனம்
வடமராட்சி கிழக்கு மக்கள் பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்தது.
பின்பு பழுதானது திருத்தப்பட்டு மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து மீண்டும் இடை நடுவே பழுதடைந்தது.
அதிகளவான பயணி
பின்பு அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி இன்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது.
அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்தது. இதனால் கூடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
மக்களின் தொடர் கோரிக்கை
வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனாலும் மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை. இதனால் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட வழிவகை செய்யுமாறு நாளை பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
