தலைவரானார் கோலி : புறக்கணிக்கப்பட்ட ரோகித் சர்மா
இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு அணித்தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில் ரோஹித் ஷர்மா புறக்கணிக்கப்பட்டுள்ளமை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை 2023 லீக் சுற்றில் திறமையாக செயற்பட்ட வீரர்களை வைத்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை லெவன் அணி ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.
தலைவராக விராட்கோலி
அந்த அணியிலேயே இந்திய அணியின் விராட்கோலி அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அந்த XI அணிக்கு தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் ஷர்மாவுக்கு இடம் வழங்கப்படவில்லை. முகமது ஷமி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய 4 இந்திய வீரர்களுக்கு அந்த அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகளின் வீரர்கள்
குறிப்பாக, அரையிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள்தான் அதிகளவில் இந்த XI பட்டியலில் இருக்கிறார்கள்.
தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் குவின்டன் டி கொக்,எய்டன் மார்க்கரம்,மார்கோ யான்சன் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மற்றும் கிளென் மக்ஸ்வெல்,அடம் ஷாம்பா நியூஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ராசின் ரவீந்திரா,இந்திய அணியின் விராட்கோலி, பும்ரா,முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா,ஆகியோரே குறித்த அணியில் இடம்பிடித்தவர்களாவர்.
12 ஆவது வீரராக இலங்கை அணியின் டில்ஷான் மதுசங்க சேர்க்கப்பட்டுள்ளார்.