கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
கனடாவில் (Canada) தற்காலிக விசாவில் உள்ள பலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
அதாவது, கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நிரந்தர வதிவிட நிலையை அதிகரிப்பதே இதற்கான சிறந்த தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பெரும்பாலானவர்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ள போதிலும் சிலர் தவிர்க்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக குடியிருப்பு
புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயிப்பதற்கான திட்டத்தை அறிவித்ததிலிருந்து முதல் முறையாக தனது மாகாண மற்றும் பிராந்திய அதிகாரிகளை அமைச்சர் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டுச் சந்தை மற்றும் பிற சேவைகள் மீது ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவிலுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்து சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |