ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.மண்ணின் மைந்தன்

Sunrisers Hyderabad Jaffna IPL 2024
By Shadhu Shanker May 14, 2024 10:02 AM GMT
Report

விஜயகாந்த் வியாஸ்காந்(Vijayakanth Viyaskanth)இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரரும், நேர்ச்சுழல் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் 13 வயதின் கீழ் பிரிவிலேயே முதலாவது துடுப்பாட்ட போட்டியில் கலந்துகொண்டார்.

பின்னர் பல உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதனை கண்டித்த இவரது தாயார் கல்வியில் அக்கறை செலுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

இருப்பினும் அவருக்கு கிரிக்கெட் மீதான அளப்பரிய ஈடுபாடு காரணமாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார். இதன்போது தந்தையார் தான் இவருக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

ஈழத்தமிழினத்துக்கு பெருமை

அதன்பின்னர் தான் தாயார் இவருக்கு ஆதரவுகளை வழங்கியுள்ளார். இவர் 2020 டிசம்பர் 4 இல் 2020 லங்கா பிரிமியர் லீக்(LPL) சுற்றில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணிக்காக தனது முதலாவது இருபது 20 போட்டியில் விளையாடினார்.

ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.மண்ணின் மைந்தன் | Viyaskanth Ipl T20 Word Cup Sri Lanka Srh Jaffna

2021 நவம்பரில், யாழ்ப்பாணம்(Jaffna) கிங்சு (முன்னைய இசுட்டாலியன்சு) அணியில் 2021 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2022 ஜூலையில், மீண்டும் 2022 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணம் கிங்சு அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொடரில் மொத்தம் 13 இலக்குகளைக் கைப்பற்றி, அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக இருந்தார்.

ரி20 உலகக் கோப்பை அணியில் வியாஸ்காந்த்: தெரிவிற்கான காரணத்தை கூறும் தெரிவுக்குழு

ரி20 உலகக் கோப்பை அணியில் வியாஸ்காந்த்: தெரிவிற்கான காரணத்தை கூறும் தெரிவுக்குழு

யாழ்.மண்ணின் மைந்தன் 

2022 டிசம்பரில், வியாஸ்காந் வங்காளதேச பிரிமியர் லீக்கின் 2022-23 போட்டிகளில் சட்டோகிரம் சாலஞ்சர்சு அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.மண்ணின் மைந்தன் | Viyaskanth Ipl T20 Word Cup Sri Lanka Srh Jaffna

2023 ஓகஸ்ட்டில், 2024 பன்னாட்டு லீக் இ20 சுற்றில் கலந்து கொள்வதற்காக எம்ஐ எமிரேட்சு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இச்சுற்றில் இவர் 8 இலக்குகளைக் கைப்பற்றி, அவரது அணிக்கு மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக விளையாடினார்.

இவர் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை 2023 செப்டம்பர் 22 இல் தமிழ் யூனியன் அணிக்காக நொண்டெசிக்றிப்டு அணிக்கு எதிராக விளையாடினார்.

வியாஸ்காந்த்

2024 ஐ.பி.எல் தொடரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கிடையிலான போட்டியில், சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் யாழ் இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கினார்.

ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.மண்ணின் மைந்தன் | Viyaskanth Ipl T20 Word Cup Sri Lanka Srh Jaffna

ஐபிஎல் தொடரில் இந்த சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியிலிருந்து வனிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) விலகுவதாக சிறிலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்த வெற்றிடத்திற்கு மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பி்டத்தக்கது.

சேப்பாக்கம் மைதானத்தில் சாதனை படைத்த தமிழக வீரர்

சேப்பாக்கம் மைதானத்தில் சாதனை படைத்த தமிழக வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி