சங்குவிற்கு வாக்களித்து சிங்கள அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் : வெளியான அறிக்கை

Sri Lankan Tamils P Ariyanethran Election
By Sumithiran Sep 17, 2024 12:43 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தமிழ் பொதுவேட்பாளருக்கு மட்டும் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியினை வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் 9வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அன்பிற்குரிய தமிழ் மக்களே!

தமிழர் தேசத்திக்குரிய தேர்தல் அன்று

இம்மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலானது தமிழர் தேசத்திக்குரிய தேர்தல் அன்று. அது சிங்கள பேரினவாதம் தமது நாட்டிற்குரிய தமது அதிபரை தேர்வு செய்யும் தேர்தலாகும்.

சங்குவிற்கு வாக்களித்து சிங்கள அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் : வெளியான அறிக்கை | Vote Sangu Disapproval Of Sinhalese Power

தற்போது போட்டியிடும் வேட்பாளர்களுள் எவர் சிறப்பாக இனவாத கோட்பாட்டினை முன்னெடுத்துச் செல்வார் என சிங்கள தேசம் தெரிவு செய்யும் தேர்தலே ஆகும். இந்த தேர்தலில் தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் எவ்விதத்திலும் கணக்கில் கொள்ளப்படப் போவதில்லை.

சுமந்திரனின் பேச்சால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் மக்கள் : ஜனா எம்.பி சுட்டிக்காட்டு

சுமந்திரனின் பேச்சால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் மக்கள் : ஜனா எம்.பி சுட்டிக்காட்டு

ஜே ஆர். ஜெயவர்த்தன முதல் ரணில் விக்ரமசிங்க வரை

சிறிலங்கா தேசத்தில் முதல் ஜனாதிபதியாகிய ஜே ஆர். ஜெயவர்த்தன முதல் தற்போது மக்கள் ஆணையின்றி பின்கதவால் ஜனாதிபதியாகிய அவரின் மருமகன் ரணில் விக்ரமசிங்க வரை அனைத்து சிறிலங்காவின் ஜனாதிபதிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதிலும், எமது நிலங்களை ஆக்கிரமிப்பதிலும், எமது சமய கலாசார விழுமியங்களை சீரழிப்பதிலும், எமது வளங்களை அந்நியர்களுக்கு தாரை வார்ப்பதிலுமே கூடிய கவனம் செலுத்தினர்.

சங்குவிற்கு வாக்களித்து சிங்கள அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் : வெளியான அறிக்கை | Vote Sangu Disapproval Of Sinhalese Power

அதேவேளையில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியலில் எவ்விதமான நன்மைகளையும் இத்தேர்தல் வழங்கப் போவதில்லை. இதுவரை நடந்த தேர்தல்களில் இத்தேர்தலே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை முற்றாக புறந்தள்ளி சிங்கள தேசத்தின் பொருளாதார பிரச்சனையை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றது.

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : யாழ்.பல்கலைக்கழக சமூகம் பகிரங்க வேண்டுகோள்

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : யாழ்.பல்கலைக்கழக சமூகம் பகிரங்க வேண்டுகோள்

சிறிலங்காவின் படுபாதகமான பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்க்கப்படாத இனப்பிரச்சனையே முக்கிய காரணம் என்பது கூட வசதியாக இன்று மறைக்கவும் மறக்கவும் படுகின்றது.ஆயினும் இந்த தேர்தலானது தமிழர் தேசம் மீது இன்று திணிக்கப்பட்டுள்ளது.

இன்முகத்துடன் வலம் வரும் சிங்கள வேடதாரிகள்

தமிழர் மீது திடீர் பாசம் கொண்ட சிங்கள வேடதாரிகள் எமது தேசம் எங்கும் இன்முகத்துடன் வலம்வந்து வாக்கு சேகரிக்கின்றனர். இதில் தமிழராகிய நாம் எந்த சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியாது. தமிழ் பொதுவேட்பாளருக்கு மட்டும் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியினை வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.இரண்டாம் விருப்பு வாக்கு என்ற விடயத்தை தமிழர்கள் முற்றாக புறந்தள்ள வேண்டும்.

சங்குவிற்கு வாக்களித்து சிங்கள அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் : வெளியான அறிக்கை | Vote Sangu Disapproval Of Sinhalese Power

போலி தமிழ் தேசியத்தை நுனிநாக்கில் பேசுபவர்களை நிராகரியுங்கள்

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எவ்வித வாக்குறுதிகளையோ அல்லது கரிசனைகளையோ வெளிப்படுத்தாத சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்க துடிக்கும் எந்த தமிழர் தரப்பையும், குறிப்பாக போலி தமிழ் தேசியத்தை நுனிநாக்கில் பேசிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்கு சேவகம் செய்யும் அனைவரையும் தமிழ் மக்கள் எமது அரசியல் வெளியிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும்.

சங்குவிற்கு வாக்களித்து சிங்கள அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் : வெளியான அறிக்கை | Vote Sangu Disapproval Of Sinhalese Power

நாம் பலமாக இருந்த காலத்திலேயே சர்வதேசம் முன்னிலையில் சிங்கள தேசத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்வுகளின்றி கபடத்தனமாக முடக்கப்பட்டன.

எமது வரலாற்று பாடத்தினூடாக இலங்கை தீவுக்கான புதிய அரசியல் யாப்பினூடாகவோ, பேச்சுவார்த்தைகள் ஊடாகவோ அல்லது உள்ளூர் பொறிமுறைகள் ஊடாகவோ தமிழ் மக்களின் பிரச்சனை நீதியான முறையில் தீர்க்கப்படாது.

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர்...சந்திரசேகரம் சுட்டிக்காட்டு

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளர்...சந்திரசேகரம் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களின் தேசிய கேள்விக்கு தமிழ் மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பினூடாகவேதான் ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை அடைய முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம். நிரந்தரமான தமிழர் தேசம் இந்த பூமிப்பந்தில் உதிக்க தொடர்ந்தும் பாடுபடுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020