இம்மாத இறுதிக்குள் விவசாயிகளின் கைகளில் வவுச்சர்கள் - விவசாய அமைச்சர்!
                                    
                    Mahinda Amaraweera
                
                                                
                    Government Of Sri Lanka
                
                                                
                    Ministry of Agriculture
                
                        
        
            
                
                By Pakirathan
            
            
                
                
            
        
    விவசாயிகளின் விருப்பத்தின்படி தேவையான உரத்தை அவர்களே கொள்வனவு செய்வதற்குரிய வவுச்சர்களை வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில், மே மாத இறுதிக்குள் குறித்த வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உரக் கொள்வனவிற்கான வவுச்சர்களை அச்சிடும் பணிகளை அரச அச்சகம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுச்சர்கள்

திண்ம உரம் உள்ளிட்ட அனைத்து வகையான உரங்களையும், இந்த வவுச்சர்கள் மூலம் கொள்வனவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
சிறுபோக செய்கைக்கு தரமான விதைகளைப் பயன்படுத்துமாறும், அதனூடாக அதிக விளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார். 
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
18 மணி நேரம் முன் 
        
        ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        