நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில்: ரணில் தலைமையில்!
இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்று சேர வேண்டும் என அமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனே (Wajira Abeywardana) வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறை தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதளை தெரிவித்துள்ளார்.
பேராசை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மேடை வெறுப்பு, கோபம், பொறாமை மற்றும் பேராசை இல்லாததாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமை தாங்க முடியும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
தேசியத் தலைமை
அத்தோடு, நாட்டின் எதிர்காலத்திற்காக தேசியத் தலைமை ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சித் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட புதிய முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்தும் வஜிர அபேவர்தனே கவலை தெரிவித்ததுடன் பலர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை என்றும், கைபேசிகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
