சதிகாரரை வெளியேற்றுங்கள் - மூண்டது ஆளும் கட்சிக்குள் போர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்கின்றனர் என இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிர்வாகத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தை பிரச்சினை இன்றி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சரவை கூட்டங்களில் அமைதியாக இருந்துவிட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் கருத்து தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா பிரதமர் எடுக்கும் தீர்மானங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.