உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலை! இஸ்ரேலில் போர் பிரகடனம் அறிவிப்பு
பாலஸ்தீனத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இன்று மிக கொடூரமான தாக்குதல் நடத்தியதுமல்லாமல் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, போர் தொடங்கிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள்
இன்று இஸ்ரேலின் பல பகுதிகளுக்குள் நுழைந்த பாலஸ்தீன ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இவ்வாறு தாக்கியுள்ளது.
பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல்களால் சுமார் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, ஹமாஸ் உறுப்பினர்களால் இஸ்ரேலியர்கள் குழுவொன்று கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 161 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.