போரின் முடிவு! ஈரான் உச்ச தலைவருக்கு நெருக்கமானவர் வெளியிட்ட அறிவிப்பு
நடந்து வரும் இந்தப் போர், ஆக்கிரமிப்பாளர்களின் தவறான கணிப்புகளின் அடிப்படையில் அல்லாமல், ஈரானின் வியூகம் மற்றும் உறுதியின்படியே முடிவுக்கு வரும் என்று ஈரான் உச்ச தலைவரின் சர்வதேச விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான அலி அக்பர் வேலாயதி தெரிவித்துள்ளார்.
1981 முதல் 1997 வரை ஈரானின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றிய வேலாயதி, தனது X கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆக்கிரமிப்பைத் தொடங்கியவர்களின் அதீத தன்னம்பிக்கை அல்லது கற்பனையான எதிர்பார்ப்புகளால் இந்தப் போர் தீர்க்கப்படாது என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
அதன்படி, ஈரானின் கவனமான திட்டமிடல் மற்றும் வலிமையின் மூலமே இப்போர் முடிவுக்கு வரும் என்று வேலாயதி வலியுறுத்தியுள்ளார்.
The Strait of Hormuz remains open to the world; however, it will always be closed to the enemies of the Iranian people and their bases in the region.
— Aliakbar Velayati (@Drvelayati_ir) April 2, 2026
The war will end with Iran’s prudence and strength—not with the delusions and wishful thinking of aggressors#Strait_of_Hormuz
மேலும், ஹோர்முஸ் நீரிணை உலகிற்கே திறந்திருந்தாலும், அது ஈரானின் எதிரிகளுக்கும் அவர்களின் பிராந்தியத் தளங்களுக்கும் எப்போதும் மூடப்பட்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்