பையை எடுத்தவர்கள் திருப்பி ஒப்படைத்துவிடுங்கள் : உருக்கமாக பேசிய கிரிக்கெட் வீரர் (காணொளி)
தனது பையை எடுத்தவர்கள் அதனை மீளவும் ஒப்படைக்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிவீரர் டேவிட் வோனர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நாளையதினம் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓய்வை அறிவித்துள்ளார் டேவிட் வோர்னர், தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் ஓய்வையும் அறிவித்திருக்கும் வோர்னர் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் தன்னுடைய பையை யாரோ எடுத்துவிட்டதாகவும், அதை திருப்பியளித்துவிடுங்கள் எனவும் உருக்கமாக பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.
மனதிற்கு நெருக்கமான பச்சை நிற தொப்பி
திருட்டுப்போனபை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டிருக்கும் அவர், “ யாரோ என்னுடைய லக்கேஜில் இருந்த என்னுடைய பையை எடுத்துள்ளார்கள். அதில் எனது மகள்களுக்கு வாங்கிய பரிசு பொருட்களும், எனது மனதிற்கு நெருக்கமான பச்சை நிற தொப்பியும் இருக்கின்றது. அந்த பச்சை நிற தொப்பி எனக்கு உணர்வுபூர்வமானது. என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன்.
ஒருவேளை நீங்கள் என்னுடைய பையை விரும்பினால் அதேபோன்ற மற்றொரு பை என்னிடம் இருக்கிறது. அதை நான் உங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறேன். எனது பையை என்னிடமோ அல்லது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடமோ திருப்பி கொடுக்கும்போது நீங்கள் எந்த பிரச்னையையும் சந்திக்க மாட்டீர்கள்.
திருப்பி கொடுத்துவிடுங்கள்
எனவே நீங்கள் என்னுடைய பையை திருப்பி கொடுத்துவிடுங்கள்” என உருக்கமாக பேசி பதிவிட்டுள்ளார்.
அந்தப் பையில் டேவிட் வோர்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. அவுஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்தியேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பியை மிகப் பெரிய கௌரவமான ஒன்றாக கருதுவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |