Ball டேம்பரிங் சர்ச்சை முழு ஆசி. அணிக்கும் தெரியும்! கவாஜாவுக்கு ஆதரவாக வோர்னர் குரல்
தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடர்பில் அவுஸ்திரேலியா அணி சார்பில் உஸ்மான் கவாஜா 100 வீதம் உண்மையானவை வெளியிட்டுள்ள தகவல்கள் என முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிரிக்கெட் அவுஸ்திரேலியா (Cricket Australia) முன்னெடுத்த விசாரணை முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக வோர்னர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்த போட்டியில் டெஸ்ட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய வீரர்கள் மணர்த்தாளைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்றியமைத்தமை கண்டறியப்பட்டது.
தொடர்ச்சியாக மறுத்த வீரர்கள்
இதனைத் தொடர்ந்து அப்போதைய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டதுடன், மற்றொரு வீரரான கமரூன் பான்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாத போட்டித் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுக்கும் பந்தை சேதப்படுத்துவதற்காக மணர்த்தாள் பயன்படுத்தப்பட்டமை தெரிந்திருந்ததாக உஸ்மான் கவாஜா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தத் திட்டம் குறித்து தங்களுக்குத் தெரியாது என அப்போதைய பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக மறுத்து வந்தனர்.
இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு அஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்து உஸ்மான் கவாஜா விவரித்தது 100 வீதம் துல்லியமானது என்று வோர்னர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2024ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற வோர்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளி மூலம் கவாஜாவுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |