இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை அவதானத்துடன் செயல்படுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமில் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் பதற்ற நிலை உருவாகலாமென எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் விரைவில் பாரிய பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ளுக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேவையற்ற சந்திப்புக்களுக்காக இலங்கையர்கள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து வெளியேற வேண்டாமென இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள நிமில் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.
அறிவுறுத்தல்
அத்துடன், வெவ்வேறு நோய்கள் காரணமாக மருந்துகளை பயன்படுத்தும் தரப்பினர், தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி வைக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீண்ட காலம் சேமித்து வைக்கக்கூடிய உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் எதிர்காலத்தில் உருவாகும் நிலையை சமாளிக்ககூடிய வகையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தயாராக வேண்டுமெனவும் நிமில் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேவையற்ற வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |