நாளை வெப்பமான காலநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (08.09.2026) பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் நேரத்தில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு
இதேவேளை, நாளை மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening