காலநிலை மாற்றம் - வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் து.சுபோகரன் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வளியில் தர சுட்டெண் சற்று உயர்வாக காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
காலநிலை மாற்றத்தின் மூலம், காற்றின் வேகம் காற்றின் திசை மற்றும் தாழமுக்க மாற்றத்தின் காரணமாக வளியில் காணப்படும் சில மாசுக்கள் இலங்கையிலே செறிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
வளி மாசு
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த சில நாட்களாக வளித்தட சுட்டெண் இலங்கையில் காணப்படுகின்ற நிறுவனங்களின் அறிக்கையின்படி சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
அதனால் மக்கள் பொதுவாக அவதானமாக நடமாடுவது நல்லது. அவ்வாறு நடமாடுவதானால், உரிய பாதுகாப்புடன் நடமாடுவது விரும்பத்தக்கது.
நேற்று முதல் மழையுடனான காலநிலை காணப்படுவதனால் வளித்தட சுட்டெண் அறிக்கையின் படி குறைந்து சென்று சாதகமான நிலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
சுமுகமான நிலை
வேகமாக குறைவடைந்து சாதாரண ஒரு மட்டத்தை அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை பயப்படவும் தேவையில்லை.
ஆனால் நோயாளிகள் வயதில் மூத்தவர்கள் சிறுவர்கள் அநாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இது அநேகமாக இன்னும் ஒரிரு தினங்களில் சாதாரண நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் மிகவும் சாத்தியமாக காணப்படுகின்றன” எனவும் தெரிவித்தள்ளார்.