பலத்த மின்னல் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மின்னலு்ககான எச்சரிக்கை
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று (16.09.2026) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |