வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்
வாகன உரிமையாளர்கள் கொள்வனவு செய்த வாகனங்களை தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தினால் கொள்வனவு செய்த நாளில் இருந்து 14 நாட்களின் பின்னர் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
வாகனம் கொள்வனவு செய்யும் பலர் திறந்த காகித வாகன பரிமாற்றங்களைச் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள்
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை இனங்கண்டு அபராதம் விதிக்கும் வேலைத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைதிட்டத்திற்கமைய கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமரா கட்டமைப்பு மூலம் இன்று முதல் பெருந்தொகையானோர் அடையாளம் காணப்படவுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் சில வாகனங்களின் உண்மையான பதிவு உரிமையாளரை பலரது திறந்த காகித மூலம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வேறு ஒருவரிடமிருந்து வாகனம் வாங்கினால் அதை உடனடியாக அவரது பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |