சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறும் சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மழையுடனான வானிலையின் போது அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம் எனவும் அதிவேக வீதியின் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவப்பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் P.C குணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
மலைநாட்டு பகுதிகள்
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மலைநாட்டில், தற்பொழுது விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |