அழகு சாதனப் பொருட்களின் பாவனை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் பயன்படுத்தப்படும் அனைத்து முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் பொடி லோஷன்களில் அதிகபட்ச அளவை தாண்டிய கன உலோகங்கள் இருப்பதாகவும் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த விடயங்கள் தெரியவந்துள்ளது.
பொறுப்பான தகவல்கள் மற்றும் தேவையான சட்டப் பணிகள் குறிப்பிடப்படாமல், பொடி லோஷன் பொதிகளில் முறைகேடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளனர்.
அதேசமயம், இவ்வாறான சட்டவிரோத முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் பொடி லோஷன்களை விற்பனை செய்த பல கடைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோதனைகள் மற்றும் விசாரணைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டாலும், வெள்ளையாக்கும் முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் திரவங்களுக்கு அதிகமான தேவை உள்ளதால் குறித்த தயாரிப்புகளை விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவதில் தடைகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
ஆகவே, முகப்பூச்சு க்ரீம்கள், திரவங்கள் மற்றும் பொடி லோஷன்களை கொள்வனவு செய்யும் பொழுது உரிய பொறுப்பான நிறுவனமொன்றின் தகவல்கள், ஏனைய தகவல்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
