தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு பிடியாணை
Sri Lanka
Law and Order
Thilini Priyamali
By Sathangani
தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க ஹோமாகம நீதிவான் பத்மசிறி ஜெயவர்தன உத்தரவிட்டுள்ளார்.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) விசாரிக்கப்படும் வழக்கில் முன்னிலையாக தவறியதற்காகவே அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அழைப்பாணை மற்றும் அழைப்பாணை நடைமுறைப்படுத்தல் அதிகாரி அருணா பிரேமசாந்தவை அச்சுறுத்தி அவமதித்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இன்று (12) விசாரிக்கப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
இந்தநிலையில் குறித்த வழக்கில் பிரதிவாதி திலினி பிரியமாலி முன்னிலையாகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதிவாதி திலினி பிரியமாலி சார்பாக எந்த சட்டத்தரணியும் விசாரணைக்கு முன்னிலையாகாததால் குறித்த விசாரணை ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்