கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு - வெளியான காரணம்
கொழும்பு (Colombo) மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடை
இதற்கமைய மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பத்தரமுல்லைப் பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் திடீர் வெடிப்பை சீர்செய்து இன்று (3) நள்ளிரவுக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எதிர்பார்க்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |