மழையுடனான வானிலையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
Sri Lanka
Weather
By Beulah
சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவ்வகையில், காசல்ரீ, மவுசாகலை கெனியோன், லக்ஷபான, நவ லக்ஷபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான் கதவுகள்
இந்தநிலையில், குறித்த நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை எந்த சந்தர்ப்பங்களிலும் திறந்துவிடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி – எம்பிலிபிட்டி பலவின்ன பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இதன்காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 1 மணி நேரம் முன்