அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறித்து வெளியான அறிக்கை!

Sri Lanka Government
By Beulah Nov 05, 2023 05:53 PM GMT
Report

வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான சமீபத்திய ஆய்வு சுற்றின் 'தேசத்தின் மனநிலை' கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

அவ்வகையில், 2023 ஜூன் மாதத்தில் 21% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின் மதிப்பீடு 2023 ஒக்டோபரில் 9% ஆக குறைந்துள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023 ஜூன் மாதத்தில் 12% ஆக இருந்த நாட்டின் நிலை குறித்த திருப்தி சரி பாதியாக அதாவது 6% ஆக குறைந்துள்ளது என்று கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

ரஷ்யாவிற்கு பேராபத்து..! லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவிற்கு பேராபத்து..! லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா

பொருளாதாரம் மீதான நம்பிக்கை மதிப்பெண் ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44 இருந்து எதிர்மறை (-) 62 ஆக குறைந்துள்ளது.

' தேசத்தின் மனநிலை' கருத்துக்கணிப்பு வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படுகிறது, மேலும் நாடளாவிய ரீதியில், தேசிய அளவிலான பிரதிநிதித்துவ பதில்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டே இக் கருத்துக்கணிப்பு இடம்பெறுகிறது.

இக் கணக்கெடுப்பு மாதிரி மற்றும் முறையானது 95% நம்பிக்கை மட்டத்தில் அதிகபட்ச பிழை வரம்பு 3% க்கும் குறைவாக கட்டுப்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மீதான அங்கீகாரம்

 "தற்போதைய அரசாங்கம் செயல்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, 9% பேர் தாங்கள் அதை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளனர் (± 1.93% பிழை விளிம்புடன்).

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறித்து வெளியான அறிக்கை! | People Recognition Government Varitte Research

மேலும், 7% பேர் தங்களுக்கு அதை பற்றிய எந்தவித கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அரசாங்கம் மீதான அங்கீகாரம் தொடர்பான தற்போதைய மதிப்பீடு 2022 ஜனவரி, ஒக்டோபர் மற்றும் 2023 பெப்ரவரியில் இருந்த 10% அருகிலுள்ள மதிப்பை பிரதிபலிக்கிறது.

இலங்கை குறித்த திருப்தி

 "பொதுவாக, இலங்கையில் நடக்கும் விடயங்கள் குறித்து நீங்கள் திருப்தியடைகிறீர்களா அல்லது அதிருப்தியடைகிறீர்களா?" என்ற கேள்விக்கு, 6% பேர் மட்டுமே திருப்தியடைவதாக தெரிவித்துள்ளனர் (± 1.66% பிழை விளிம்புடன்).

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறித்து வெளியான அறிக்கை! | People Recognition Government Varitte Research

இந்த மதிப்பீடு 2023 பெப்ரவரியில் காணப்பட்டதை போலவே 4% ஆக குறைவாகவே இருந்தது.

பொருளாதாரம் தொடர்பான நம்பிக்கை

ஜூன் மாதத்தில் எதிர்மறை (-) 44 ஆக இருந்த பொருளாதார நம்பிக்கை மதிப்பெண் ஒக்டோபரில் எதிர்மறை (-) 62 ஆக மோசமடைந்து காணப்படுகிறது.

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறித்து வெளியான அறிக்கை! | People Recognition Government Varitte Research

இருப்பினும், பொருளாதார நம்பிக்கை மதிப்பெண் எதிர்மறை (-) 96 மற்றும் எதிர்மறை (-) 78 க்கு இடையில் ஏற்ற இறக்கமாக காணப்பட்டாலும் கூட, 2022 இல் காணப்பட்ட அளவை விட சிறப்பாகவே இருக்கிறது.

பொருளாதார நம்பகத்தன்மையை கணக்கிடுவதற்கு தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அதன் வழிமுறைகளை மதிப்பிடும் பல தேர்வு வினாக்கள் பயன்படுத்தப்பட்டன.

மதிப்பெண்கள் எதிர்மறை (-) 100 முதல் நேர்மறை (+) 100 வரை இருக்கலாம். பூஜ்ஜியத்திற்கு மேல் உள்ள மதிப்பு, பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தை எதிர்மறையாகப் பார்க்காமல் நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

அனைவரும் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகவும் (நல்ல அல்லது சிறந்த நிலைக்குப் பதிலாக) அது மோசமாகி வருவதாகவும் (சிறந்த நிலைக்குப் பதிலாக) கருதினால், அதற்குரிய மதிப்பெண் (-) 100 ஆக இருக்கும். 

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்

அரசாங்கம், நாடு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக மக்களின் அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கையை மதிப்பிடுவதற்காக "தேசத்தின் மனநிலை" கருத்துக்கணிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறித்து வெளியான அறிக்கை! | People Recognition Government Varitte Research

நாடளாவிய ரீதியில் தேசியளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 2023 ஒக்டோபர் 21 முதல் 29 வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வெரிட்டே ரிசர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு கருவியின் ஒரு பகுதியாக இக் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

இதன்மூலம் இலங்கையர்களின் கருத்துகளை ஆய்வு செய்ய மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அமைச்சரவையை மாற்றியமைப்பது போன்று கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது : சஜித் எச்சரிக்கை!

அமைச்சரவையை மாற்றியமைப்பது போன்று கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது : சஜித் எச்சரிக்கை!


ReeCha
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023