கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை
கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (National Water Supply and Drainage Board) அறிவித்துள்ளது.
அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்றைய தினம் (18.02.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடை
அதன்படி, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிசை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பத்தரமுல்லைப் பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் வழங்கப்படுகிறது.
நாளை (19) காலை 6 மணிக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |