யாழில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை!

Jaffna National People's Power - NPP Ramalingam Chandrasekar Karunananthan Ilankumaran
By Sathangani Jan 06, 2025 11:23 AM GMT
Report

சுண்ணக்கல் ஏற்றி வந்த பாரவூர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (K.Ilankumaran) செயற்பட்ட விதம் நல்லது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (R.Chandrasekar) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோதமாக செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசாங்கத்தில் இது தடுத்து நிறுத்தப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நேற்றையதினம் (05) யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தவறிய கட்சித் தலைமைகள்

சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தவறிய கட்சித் தலைமைகள்

நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றிச் சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நீங்கள் செய்தது தவறு, குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன்.

யாழில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை! | We Must Eradicate The Piracy Industry In Jaffna

ஆனால் தற்போது பார்க்கும் பொழுது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்று தோன்றுகிறது. இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வெட்ட வெட்ட பூதம் கிளம்பியது போல இன்று பல பிரச்சினைகள் வெளிவருகின்றன.

சரசாலை பகுதியில் சட்டரீதியான வேலைகள், சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன. தனியார் காணிகளில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன, அதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கு அருகாமையில் அரச காணிகள் உள்ளன அதில் அனுமதி பெறப்படாமல் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் வேளையில் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது.

காணி பகிர்ந்தளிப்பில் முறைகேடு : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

காணி பகிர்ந்தளிப்பில் முறைகேடு : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

வாழ்வாதாரம் பாதிப்பு

இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த தொழிலை புரிகின்ற வியாபாரிகளோ, தொழில்புரிகின்ற ஊழியர்களோ அல்ல. மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கிராம செயலர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

அரச அதிகாரிகள் சரியாக செயற்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அத்துடன் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் விளைகிறேன்.

யாழில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை! | We Must Eradicate The Piracy Industry In Jaffna

சரசாலையில் உள்ள சுண்ணக்கல்லுக்கும் இளங்குமரன் எம்.பி மறித்த லொறியில் இருந்த சுண்ணக்கல்லுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது. அப்படியாயின் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இந்த திருட்டுத் தொழில் இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுகின்றது.

ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள்.

ஆனால் இவ்வாறான அகழ்வுகள் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு பல பரம்பரைகள் பலியாகும் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடக்கூடாது. ஒரு சில வியாபாரிகளின் பணப் பசியை போக்கும் தேவைக்காக இந்த செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசாங்கத்தில் இது தடுத்து நிறுத்தப்படும்.” என தெரிவித்தார்.

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள்

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025