ரணில் அரசாங்கத்தின் நோக்கம் -மகிந்த வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் மீட்சிக்காக பாடுபடும் எவருக்கும் ஆதரவளிப்பதாகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாகவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று (28) கண்டியில் தெரிவித்தார்.
நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட மகிந்த, தலதா மாளிகையில் இருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க மக்கள் நேர்மையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் பதவிகள் கிடைக்குமா என வினவிய போது, நாட்டின் மீட்சிக்காக பாடுபடும் எவருக்கும் ஆதரவளிப்பதாக முன்னாள் அதிபர் தெரிவித்தார். தலதா மாளிகையில் மகிந்த ராஜபக்சவுடன் திருமதி ஷிரந்தி ராஜபக்சவும் காணப்பட்டார்.
