அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தொடர்பில் தலிபான்கள் விடுத்துள்ள அறிவிப்பு
united states
afghanistan
taliban
By Sumithiran
அமெரிக்கா உட்பட உலக நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்புவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
காபூல் விமானநிலையத்திலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதை அடுத்து விமான நிலையத்திற்குள் தலிபானின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் வருகை தந்தனர்.
இதன்போது ஓடுபாதையில் வைத்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் ... இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது."
"நாங்கள் அமெரிக்கா மற்றும் உலகத்துடன் நல்ல உறவை விரும்புகிறோம். அவர்கள் அனைவருடனும் நல்ல இராஜதந்திர உறவுகளை வரவேற்கிறோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.