யாழ் மக்களின் நம்பிக்கையை சிதறடிக்க மாட்டோம் : யாழில் அநுர உறுதி

Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka Ramalingam Chandrasekar
By Theepan Jan 16, 2026 05:34 AM GMT
Report

எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனவும், அந்த நம்பிக்கையை சிதறடிக்கமாட்டோம் என பொங்கல் நாளில் கூறுகின்றேன் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வேலணையில் நேற்று (15) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பினார்கள். அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுகிறது.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை

மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

கடந்த கால அரசாங்கங்களில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அவர்களைப் புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை எம்மிடம் கையளித்தார்கள் அதனை நாம் ஏற்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

யாழ் மக்கள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கினார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நாம் சிதறடிக்க மாட்டோம் என இந்தப் பொங்கல் நாளில் கூறிவைக்க விரும்புகிறேன்.

எமது பயணம் பல்வேறு சவால்கள் இடையூறுகளின் மத்தியில் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணையையும் மக்களின் நம்பிக்கையையும் பலப்படுத்தும் முகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

NPP திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது - கடற்தொழில் அமைச்சர்

NPP திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது - கடற்தொழில் அமைச்சர்

யாழ் மாவட்ட மக்கள் 

நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் பிரதிபலிக்கும் முகமாக எமது அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னோக்கி நகர்ந்துவருகின்ற நிலையில் இதைப் பொறுக்க முடியாதவர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்புகிறார்கள்.

யாழ் மக்களின் நம்பிக்கையை சிதறடிக்க மாட்டோம் : யாழில் அநுர உறுதி | We Will Not Break Jaffna People S Trust Anura Said

ஆகவே தமிழ் மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள் எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவர்களின் நம்பிக்கையை சிதறடிக்காமல் பலப்படுத்துவோம் நீங்களும் எம்மோடு இணைந்திருங்கள்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவானந்தராஜா, இளங்குமரன், ரஜீவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் எஸ் .உமா மகேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் கனகேஸ்வரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம்

யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026