முல்லேரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள்: முன்னாள் அதிகாரியொருவரும் கைது!
முல்லேரியாவில் கைத்துப்பாக்கி, 9 மிமீ மகசின் மற்றும் 12 கிராம் 35 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற வீதியில் உள்ள தியத உயன அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 4 ஆம் திகதி நாடாளுமன்ற வீதியில் உள்ள தியத உயன அருகே உள்ள பாலத்தின் அருகே சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ அதிகாரி
இதன்போது கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முல்லேரியாவில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இலங்கை இராணுவத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டவர் எனவும் அவருக்கு `சூவா சமந்த' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினருடன் தொடர்புகள் இருப்பதாகவும், அந்தக் குழு மூலம் அவர் போதைப்பொருட்களைப் பெறுவதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
அதன்படி, கைது செய்யப்பட்ட நபர்களும் ஆயுதங்களும் மேலதிக விசாரணைக்காக குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |