பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்
நாட்டின் பல மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இவ்விடயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னலுடன் கூடிய மழை
பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |