ஐ.நா பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடர் : விஜித ஹேரத் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 81வது கூட்டத்தொடர் வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை மேலாண்மை செய்தல்: அனைவருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை' (Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All) எனும் கருப்பொருளுக்கு அமைவாக இந்த கூட்டத்தொடர் அமையவுள்ளது.
இலங்கையின் தேசிய அறிக்கை
இதில் செப்டெம்பர் 28 அன்று நடைபெறவுள்ள உயர்மட்ட வாரத்தின் பொது விவாதத்தின்போது, இலங்கையின் தேசிய அறிக்கையை அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், ஐ நா சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோரை அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |