மட்டக்களப்பில் தொடரும் கனமழை - அதிகரிக்கும் குளங்களின் நீர்மட்டம்
புதிய இணைப்பு
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல பிரதேசங்களிலுமுள்ள தாழ நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் மாவட்டத்தில் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ளவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றர்.
எனினும் திங்கட்கிழமை (20.01.205) காலையிலிருந்து மழை சற்று ஒய்ந்துள்ள போதிலும் வெள்ள நீர் விரைவாக மட்டக்களப்பு வாவியை நோக்கி வழிந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இராணுவதினர் பாதுகாப்பு கடமை
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, வெல்லாவெளி, பழுகாமம், போதீவு, குருமண்வெளி, உள்ளிட்ட பல பகுமிகளிலுமுள்ள கிராமியக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகின்றன.
எனினும் கிராமங்களிலுள்ள பெரும்பாலான உள்வீதிகள் வெள்ள நீரினால் மூழ்கப்பட்டுள்ளனதனால் உள்ளுர் போக்குவரத்துச் செய்வதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க மண்டூர் - வெல்லாவெளி வீதியை ஊடறுத்து வெள்ளநீர் விரைவாகப் பாய்வதனால் அங்கு இராணுவதினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அவ்வீதியுடனான போக்குவரத்திற்காக போரதீவுப் பற்றுப் பிரதேச சபை உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்தில் ஈடுபயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர்.
குளத்தின் நீர்மட்டம்
இது இவ்வாறு இருக்க திங்கட்கிழமை காலை 6 மணிவரையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 31.அடி 5அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32அடி 8 அங்குலம்.
உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 18அடி 3அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலம், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 12அடி 3அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 11அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளர்.
முதலாம் இணைப்பு
வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (20.1.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகமூட்டமான வானம்
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை
ஏனைய பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |