ஹட்டனில் இன்று ஆலங்கட்டி மழை
weather
srilanka
hatton
people
By Vasanth
ஹட்டன் - குடாகம பிரதேசத்தில் இன்று மாலை ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பி.ப. 3.30 மணியளவில் பெய்த இம் மழையில் அதிகளவான பனிக்கட்டிகள் வீழ்ந்துள்ளன.
சுமார் 5 நிமிடங்கள் வரை இது தொடர்ந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆலங்கட்டி மழை (hail) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும்.
பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம்